(50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்)
நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் கானபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்குமென இன்றைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.
சப்ரகமுவ, மேற்கு, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், ஏனைய பாகங்களில் சீரான காலநிலை நிலவும். நாட்டின் பல பாகங்களிலும் மணிக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.