(மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
சீன இராணுவத்தின் 91வது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்தபோதே குறித்த இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பேசிக்கொண்ட விடயம் எவையும் வெளியாகவில்லை.
மேலும், இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சிக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சி அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.