(அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை)
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வதுதிருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்புநேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதில்லை. மாறாக வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் மக்களை ஏமாற்றிக்கொண்டு ஆட்சிக்கு வந்தநல்லாட்சி அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டம் கொண்டுவர வேண்டியஅவசியம் இல்லை. ஏனெனில் அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்திடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனின் ஏன் அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தைகொண்டுவர முனைய வேண்டும். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில்மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்கிறது. ஆகவே வழிநடத்தல்குழுவிலேயே அது குறித்து பேசித் தீர்மானித்திருக்கலாம். அதனைவிடுத்துஇருபதாவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை.வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரவுள்ளதான கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.மேலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றிக்கொண்டே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அவ்வாறான செயற்பாடுகளையேமேற்கொள்கிறது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. இந்தியப் பிரதமர் இணைய வழிமூலம் நேரடியாகபேசுவதென்றாலே யாழ்ப்பாணம் செல்லும் ஞாபகம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வருகிறது. இல்லையென்றால் அவர்கள் அங்கு செல்வதுமில்லை,அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுமில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் ஒருபோதும் பதாளஉலகக் குழுக்களை இணைத்துக்கொண்டு ஆட்சி நடத்தவில்லை. ஆனால் தற்போதைய நிலை எவ்வாறுள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அத்துடன் தற்போதைய ஜனாதிபதி, தான் இரவு பத்து மணிக்கு உறக்கத்திற்குச்சென்று காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும்வேறு நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதனை அறிந்துகொள்ள முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ24 மணி நேரமும் நாட்டுக்காக சேவையாற்றுபவராக இருந்தார்.
மேலும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கைக்குஇணங்க அர்ஜுன் அலோசியஸ் கைதுசெய்யப்பட்டிருக்கிறா
அத்துடன் “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகைச் செய்தி விவகாரம் குறித்து நாள்ஒன்றுக்கு ஐந்து மில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாக ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்படஎமக்கு சேறு பூசுவதற்கே குறித்த நிதியை செலவு செய்கின்றனர். மேலும்கடந்த தேர்தல் காலத்தின்போது தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கு சில தரப்பினர் நிதி வழங்கியுள்ளமை தெரிய வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.