• Sat. Oct 11th, 2025

புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு

Byadmin

Jul 24, 2018

(புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு)

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மைக்கு பாதிப்பை தவிர்க்க தலையிடுமாறுகோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல்ஒன்றை நடத்தவுள்ளதாக  பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்குமுன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

புதிய கலப்பு தேர்தல்  முறையில் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்று சுட்டிக்காட்டப்பட்டது.புதிய  தேர்தல்முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்‌ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில்வாக்களித்திருந்தது.

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பதைஅன்றே நாம் சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாக வாக்களித்தசிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றனர்.இன்றுபாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்தஅணியின் உதவியை கொண்டே மிக இலகுவாக  மீண்டும் பழைய முறையில்தேர்தலை நடத்த செய்ய முடியும்.

எனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை  நிவர்த்திசெய்ய உதவக்கோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கியகலந்துரையாடல் ஒன்றை  எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜனபெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல்சத்தார் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *