கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் நடத்தும் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (16) வெள்ளிக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையிலும் கல்லூரியின் அதிபர் ரத்னாயக்க தலைமையிலும் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில், அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி உட்பட மேலும் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது இஸ்லாமிய மஜ்லிஸின் 18 ஆவது இப்தார் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர் –