(குமார் சங்கக்கார அரசியலில் நுழைந்தால் ஆதரவு – ராஜித)
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தீவிர அரசியலில் நுழைந்தால், அவருக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,
“ சங்கக்காரவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக, அவருடன் ஐக்கிய தேசிய முன்னணி பேச்சுக்களை நடத்தவில்லை.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி அவருடன் பேச்சு நடத்தியதா என்று தெரியவில்லை.
சங்கக்கார அரசியலில் நுழைய முடிவு செய்தால் அது நல்லதொரு நகர்வாக இருக்கும். ஐக்கிய தேசிய முன்னணி அவருக்கு ஆதரவு அளிக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த அதிபர் தேர்தலில் குமார் சங்கக்காரவை பொதுவேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.