(புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்)
புகையிரத தொழிற்சங்கங்கள் சில தற்போது முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதனால் புகையிரத போக்குவரத்துக்கள் சில பாதிப்படைந்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்,நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.
பிரதியமைச்சர் ஒருவர் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் வேலி கட்ட முற்படுவதற்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத செயற்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன கூறினார்.