(உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்வதற்கான TOP 10 பட்டியல்)
உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் பிரான்ஸ் அணியின் வீரர்களான எம்பாப்பே மற்றும் கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்துள்ளது.
21ஆவது உலகக்கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை நடந்து முடிந்தது. இதில் 1998ஆம் ஆண்டு உலக சாம்பியனான பிரான்ஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் குரோஷி யாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால் பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும்.
இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம் மேளனம் நேற்று வெளியிட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியிலிருந்து 3 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற் றனர்.
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் களான எம்பாப்பே மற்றும் கீரிஸ்மேன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
இருவரும் இந்த உலகக் கோப்பையில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.
இதே போல பிரான்ஸ் நாட்டின்
வீரரான ரபெல் வரனேயும் அந்தப் பட்டியலில் உள்ளார்,
உலகக்கிண்ணத்தில் 6 கோல்களை அடித்து விருதுபெற்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் மற்றும் அவரோடு உலகக்கிண்ண தொடரில் தங்கப்பந்து விருதை வெற்றிகொண்ட குரோஷிய அணித்தலைவர் மொட்ரிச் ஆகியோ ருடன் ஆர்ஜன்ரீனா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி மற்றும் போர்த் துக்கல் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரும் இடம்பெற்றிருக்க பிரேசிலை சேர்ந்த முன்கள வீரரான நெய் மருக்கு இதில் இடம் கிடைக்க வில்லை .
மேலும் எகிப்து அணியின் முன்கள் வீரரும் லிவர்புல் அணியின் தலைசிறந்த வீரருமான 26 வது நிரம்பிய முஹம்மது சலாஹ்வுக்கும் இப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளதோடு இம்முறை இடம் பெற்ற உலகக்கிண்ண தொடரில் 3ஆம் இடம் பிடித்த பெல்ஜியம் அணியின் இரண்டு வீரர்களும் இப்பட்டி யலில் பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்),
லயனல் மெஸ்ஸி (ஆர் ஜென்ரீனா),
எம்பாப்பே, கிரீஸ்மேன், ரபெல் வரெ (பிரான்ஸ்),
ஈடன் ஹசாட், கெவின் டி.புருயன் (பெல்ஜியம்),
ஹாரிகேன் . (இங்கிலாந்து),
மோட்ரிச் (குரோஷியா),
முகம்மது சலாஹ் (எகிப்து ).