(துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து)
ஒருநாள் போட்டிகளின் போது, ஆடுகளத்தின் தன்மையினை பொருத்து 300 அல்லது 350 ஓட்டங்களை பெற துடுப்பாட்டாளர்களால் மனதினை ஒருநிலைப்படுத்த முடியும் என இலங்கை மற்றும் தென்னாபிரிக்க இடையே இன்று(08) நடைபெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டிகளுக்கு முன்பதாக ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.
“எதிர்பாராவிதமாக இறுதிப் போட்டியில்(05) நாம் சிறப்பாக விளையாடவில்லை. எனினும், சிறந்த ஆடுகளத்தில் விளையாடுவதாயின் எமக்கு 300 அல்லது அதனையும் தாண்டிய இலக்கினை வழங்க முடியும்.. காலத்துடன் நமது வீரர்களும் அதற்கு பழக்கப்படுவர்..”
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்தும் தோல்வியினை தழுவிய நிலையில், தமது கௌரவத்தினை காப்பதற்காக எஞ்சிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்பதாக ஏஞ்சலோ மேத்யூஸ் மேலும் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் எங்கள் கௌரவத்திற்காக விளையாட வேண்டும். என்றாலும், அன்று போட்டியில் நாம் எதோ சாதித்தோம். அதனை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும்… காலத்தோடு ஒத்துப் போக நமது வீரர்கள் பழக்கப்படுவார்கள். நாம் முன்னேற வேண்டுமாயின் குறித்த பாதையில் செல்ல வேண்டும்”