(“தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது” – மாலிங்க)
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபத்துக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படாமை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில், லசித் மாலிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
“…. இலங்கை அணியிலிருந்து தொடர்ந்தும் ஓரம் கட்டப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி தற்போது எனக்கு எழுந்துள்ளது. நான் உடற் தகுதியில் தேர்வு பெற்று விட்டேன்.. தான் இன்னும் திறமையோடுதான் பந்தும் வீசுகின்றேன்.. இது பழிவாங்கலா இல்லை அணியில் இருந்து ஓரங்கட்டலா என்பது பற்றித் தெரியவில்லை.. என்றாலும் எல்லா வீரர்களும் எல்லா ஊடக சந்தர்ப்பங்களிலும் தான் ஒதுக்கப்படவில்லை எதிர்வரும் போட்டிகளில் உள்வாங்கப்படுவார்கள் என கூறிய போதிலும், தான் எதிர்பார்த்திருக்க தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது…”