• Sun. Oct 12th, 2025

ஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்

Byadmin

Aug 23, 2018

(ஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்)

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய வகை இயங்குதளம் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களிலும் புதிய இயங்குதளம் சீராக இயங்கும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஆன்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளத்தில் கூடுதலாக 500 எம்பி ஸ்டோரேஜ், வேகமான பூட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) தளத்தில் வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம், டேட்டா பயன்பாட்டை டிராக் செய்யும் டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஓ.எஸ். உடன் கோ எடிஷன் செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த செயலிகள் கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன. அதன்படி யூடியூப் கோ செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் கூகுள் கோ செயலியில் இணையப்பக்கங்களை மிக எளிமையாக படிக்க ஏதுவாக ஒவ்வொரு வார்த்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. மேப்ஸ் கோ செயிலியில் நேவிகேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளதால், பயனர்கள் மிக எளிமையாக தங்களக்கு தெரியாத பகுதிகளுக்கு சென்றுவர முடியும்.
இதேபோன்று அசிஸ்டண்ட் கோ செயலியில் கூடுதலாக ஸ்பானிஷ், பிரேசிலியன் போர்ச்சுகீசு மற்றும் இந்தோனேசிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் ப்ளூடூத், கேமரா, ஃபிளாஷ்லைட் மற்றும் ரிமைன்டர்களுக்கான வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. ஆன்ட்ராய்டு கோ எடிஷனுக்கான ஆன்ட்ராய்டு மெசேஜஸ் செயலி 50% சிறியதாகவும், போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.
ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட இருக்கிறது. #Android9Pie #Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *