• Sun. Oct 12th, 2025

உலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது

Byadmin

Aug 23, 2018

(உலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது)

தென்கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உலகின் முதல் 5ஜி மோடெமை அறிமுகம் செய்துள்ளது. எக்சைனோஸ் 5100 5ஜி மோடெம் அனைத்துவித 5ஜி தரத்துக்கும் உகந்தது என சாம்சங் தெரிவித்துள்ளது.
புதிய மோடெம் அதிக சக்திவாய்ந்த 10 என்.எம். பிராசஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோடெம் ரேடியோ அக்சஸ் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது.
ஓவர்-தி-ஏர் (OTA) 5ஜி-என்.ஆர். டேட்டா கால் சோதனை வயர்லெஸ் சூழலில் 5ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் எக்சைனோஸ் மோடெம் 5100 பொருத்தப்பட்ட பயனர் பயன்படுத்தக்கூடிய ப்5ஜி ரோடோடைப் சாதனத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
இத்துடன் சந்தையில் 5ஜி மொபைல் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வர பல்வேறு சர்வதேச டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து சாம்சங் பணியாற்றி வருகிறது.
எக்சைனோஸ் 5100 மோடெம் 3ஜிபிபியின் 5ஜி தரத்திற்கு உகந்த எம்.எம். அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம்கள் மற்றும் 2ஜி GSM/CDMA, 3ஜி WCDMA, TD-SCDMA, HSPA மற்றும் 4ஜி எல்.டி.இ. போன்றவற்றை ஒற்றை சிப் மூலம் சப்போர்ட் செய்கிறது.
புதிய மோடெம் 5ஜி-யின் 6 ஜிகாஹெர்ட்ஸ் செட்டிங் மற்றும் எம்.எம். வேவ் செட்டிங்கில் நொடிக்கு 6ஜிபி செட்டிங்கில் அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான டவுன்லின்க் வேகம் வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இது தற்போதைய டேட்டா வேகங்களை விட 1.7 மடங்கு மற்றும் ஐந்து மடங்கு வரை அதிகம் ஆகும். #SamsungIoT #5G

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *