(அசிங்கமாக தொங்கும் தொப்பையை குறைக்க.. ஜப்பானியர்கள் கூறும் ரகசியம்..!)
தொப்பை வந்து விட்டதே என்று கவலையடைந்து இயன்ற எல்லா உடற்பயிற்சிகளையும் செய்துவிட்டீர்களா? அப்போதும் நீங்கள் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லையா? கவலை வேண்டாம். ஜப்பானிய முறையில் தொப்பையை குறைக்கலாம்.
நீங்கள் நினைக்கும் அளவு இது அவ்வளவு கடினமானது அல்ல. சுவாசத்தின் மூலமே தொப்பைக்கு தீர்வு காணும் முறையே இது. அது எப்படி என்கின்றீர்களா?
பின்வரும் பயிற்சியை 2 தொடக்கம் 10 நிமிடங்கள் வரை செய்யுங்கள்.
01. முதலில் எழுந்து நின்று ஒரு காலை முன் வைத்து மற்றைய காலை பின்னால் வைக்கவும்.
02. பின்னர் உடம்பின் முழு பாரத்தையும் பின்புறத்தில் தாங்கும் வண்ணம் இருக்கவும்.
03. இந்த நிலையில் இருந்து கொண்டு மூன்று செக்கன்களுக்கு மூச்சை உள்ளே இழுக்கவும். இதன் போது கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக தூக்கவும்.
04. பின்னர் ஏழு செக்கன்களுக்கு மூச்சை நன்றாக வெளியே விடவும்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது நாம் சுவாசிக்கும் ஒட்சிசனானது எமது உடம்புக்குள் சென்று கொழுப்பு உள்ள செல்களின் மீது படுகின்றது.
இதன் போது அந்த செல்லில் உள்ள தண்ணீர் மற்றும் கார்பன் என்பன பிரிந்து செல்லும். இதன் மூலம் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.