• Mon. Oct 13th, 2025

நரை முடியை வெங்காயத்தை வைத்து இலகுவாக விரட்டியடிக்கலாம்… எப்படி தெரியுமா..?

Byadmin

Aug 28, 2018

(நரை முடியை வெங்காயத்தை வைத்து இலகுவாக விரட்டியடிக்கலாம்… எப்படி தெரியுமா..?)

நரை முடி தோன்றி விட்டது என்று மனமுடைந்து விட்டீர்களா? பார்லர்களுக்கு சென்று ஹெயார்டை உபயோகித்துப் பார்த்தீர்களா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நரை முடியை கருமையாக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், வீட்டில் கிடைக்கும் வெங்காயத்தை வைத்தே இந்த நரை முடிக்கு தீர்வு காணலாம். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் இருப்பதைப் போன்றே அழகுபடுத்தும் விடயங்களுக்கும் இது தீர்வாக அமைகின்றது.

வெங்காயத்தை இரு வேறு முறைகளில் பயன்படுத்தி இந்த நரைக்கு தீர்வு காணலாம். அது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

முறை 01
தேவையான பொருட்கள்
01. ஒரு மேசைக் கரண்டி வெங்காயச் சாறு
02. ஒரு லீட்டர் கொதித்தாறிய தண்ணீர்

செய்முறை
தண்ணீருடன் வெங்காயச் சாறை ஊற்றவும். இந்தக் கலவையை நீங்கள் குளித்து முடித்த பின்பு தலையில் ஊற்றிக் கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடைவ இவ்வாறு செய்தல் வேண்டும். வெங்காய மணம் அடுத்த முறை ஷhம்பு போடும் வரை தலையில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முறை 02
தேவையான பொருட்கள்
01. ஒரு வெங்காயம்
02. பிளென்டர்
03. வடிதட்டு

செய்முறை
வெங்காயத்தை கழுவி அதன் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனை பிளென்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்தச் சாற்றை எடுத்து தலையின் ஓட்டில் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் 30 – 45 நிமிடங்கள் வரை வைத்திருந்து ஷhம்பு போட்டு கழுவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வது உத்தமம்.

குறிப்பு
01. நரை ஏற்படுவதை தவிர்க்க விட்டமின் பி12 மற்றும் விட்டமின் ஏ உள்ள உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
02. அயடின் அதிகளவில் உள்ள பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
03. இரசாயனங்கள் கலந்ததை உபயோகிக்காது ஹெனாவை பாவிப்பது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *