• Mon. Oct 13th, 2025

ஏ.சி. காரில் பயணம் செய்யும் போது இதில் எல்லாம் எச்சரிக்கையாவே இருங்க..!

Byadmin

Aug 28, 2018

(ஏ.சி. காரில் பயணம் செய்யும் போது இதில் எல்லாம் எச்சரிக்கையாவே இருங்க..!)

கார் பயணங்களில் ஏ.சி. போடாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்ற வகையில், ஏ.சி.யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

கோடைக்காலம் மட்டுமில்லை, அனைத்து காலத்திலும் காரில் ஏசி சிஸ்டத்தின் பயன்பாடு இன்றைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாண்டால், பிரச்சனைகள் இல்லாத சுகமான பயணத்தை அனுபவிக்கலாம். கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாள்வதன் மூலமாக பல அனுகூலங்களையும் பெற முடியும்.

எந்தெந்த நேரத்தில் கார் ஏசியை எவ்வாறு இயக்குவது குறித்த சில வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது கார் ஏ.சி. பயன்படுத்துவதில் கவனம் தேவை. வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஏ.சி.யை ஆன் செய்தால், உடனே ஜன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ஏ.சி.யை ஆன் செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு ஜன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.

இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் ஏ.சி.யை போட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் என்ஜின் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

மேனுவல் ஏசி காராக இருந்தால், ஏசி மெஷினை ஆன் செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி இருந்தால் ஆரம்பத்தில் ஃபேன் வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *