(குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா)
தேவையான பொருட்கள் :
வேக வைத்த பாஸ்தா – 200 கிராம்
பன்னீர் – 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட் – 1
இஞ்சி – அரை டீஸ்பூன்
பூண்டு – அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும்.
இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும்.