• Sun. Oct 12th, 2025

ரூபா நோட்டுகள் தொடர்பான மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது

Byadmin

Jun 17, 2017

இந்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும்.

அவ்வாறான செயற்பாடுகளுக்காக சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதமான தண்டனைகளையும் வழங்க முடியும்.

மேற் குறிப்பிட்டவாறான நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்புப் பெறுமதியை இழப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

தற்போது சேதமடைந்த நாணயத்தாள்களை வங்களில் கொடுத்து, அதன் பெறுமதிக்குரிய நாணயத்தாள்களைப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறாயினும், இவ்வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் மட்டுமே இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.

எனவே, சேதமடைந்த நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்களினூடாக மாற்றிக் கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *