(கோட்டாபய ராஜபக்ஷ CID முன்னிலையில் ஆஜர்)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ இன்று CID முன்னிலையில்….
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(12) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று(12) முற்பகல் 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கித் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 17ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.