(நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை)
எதிர்வரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் நேற்று(11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.