(“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்..” – ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு)
இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம், நியூயோரக் நகரிலுள்ள ஐ.நா பிரதான அலுவலகத்தில், நேற்று(25) ஆரம்பமான நிலையில், குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி சிறிசேன, தொடர்ந்தும் உரையாற்றியபோது;
“.. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இடமளிக்குமாறும் இந்த விடயத்தில், சர்வதேசத்தின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், தமக்குத் தேவையில்லை என்றும் கூறிய ஜனாதிபதி, முடிந்தால், எமது பிரச்சினையை எம்மாலேயே தீர்த்துக் கொள்வதற்கான ஒத்துழைப்பை மாத்திரம் வழங்குமாறு, சர்வதேசத்திடம் கோருகிறேன்..” என தெரிவித்துள்ளார்.