• Fri. Nov 28th, 2025

மாரடைப்பு வரப்போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே உணர்த்தும் அறிகுறிகள்..!

Byadmin

Sep 26, 2018

(மாரடைப்பு வரப்போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே உணர்த்தும் அறிகுறிகள்..!)

இப்போதெல்லாம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும். உயர் கொலஸ்ரோல், புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம், அதிகஎடை, மதுபானப் பழக்கம் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கம் என்பன மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்குன் முன்னதாக அது தொடர்பில் உடல் தெரியப்படுத்த முயற்சிக்கும். அவை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

01. இரத்தத்தை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுவதால் பாதங்கள், கணுக்கள் மற்றும் கால்கள் என்பன வீங்கிக் காணப்படும். சில சமயங்களில் உதட்டில் நீல நிற புள்ளிகள் தோன்றி மறையும்.

02. இதயம் மந்த கதியில் செயற்படும் போது நுரையீரலுக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

03. இரத்தத்தில் போதியளவு ஒட்சிசன் காணப்படாத காரணத்தால் தலை சுற்று ஏற்படும். இது போன்ற நேரங்களில் வைத்தியரை உடனடியாக அணுகுதல் வேண்டும்.

04. நுரையீரலில் இரத்தம் அதிகளவு இருந்தால் தொடர் இருமல் ஏற்படும். இந்த இருமலை போக்கிக் கொள்வது கடினமாக காணப்படும் போது அது தொடர்பில் அவதானம் தேவை. இருமும் போது வெளி வரும் சளியும் வெள்ளை நிறமாகவோ அல்லது இளஞ் சிவப்பு நிறமாகவோ காணப்படின் அதில் இரத்தம் கலந்துள்ளது எனப் பொருள். எனவே வைத்தியரை நாட வேண்டும்.

05. வழமைக்கு மாறாக அதிக சோர்வு மற்றும் நாளொன்றில் பல தடவைகள் உறக்கம் ஏற்படின், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

06. இதயத்தில் எரிவு மற்றும் அழுத்தம் போன்ற நிலைமைகள் தோன்றின் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படின் இதயம் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தாது வைத்தியரை நாட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *