(விலைச் சூத்திரம் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பதில் சந்தேகம் நிலவுகிறது – மரிக்கார்…)
அரசின் எரிபொருள் விலைச் சூத்திரமானது தனக்கு புரியாதுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையின் அதிகரிப்புடன் விலையினை அதிகரிக்கும் அளவு தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
இரத்மலானை பகுதியில் நலன்புரி சங்கங்கள் 07 இற்கு 300,000 பெறுமதியான வைபவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“அரசானது எரிபொருள் விலைச் சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அது எனக்கென்றால் புரியவில்லை.. எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை அதிகரிப்புடன், எரிபொருள் விலைச் சூத்திரம் ஒன்று இருந்தால் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் குறித்த விலை அதிகரிப்பில் சாதாரண நிலை ஒன்று உள்ளதா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
இந்த அரசு, ராஜபக்ஷ காலத்தில் 35 ரூபாவாக இருந்த பெட்ரோல் லீட்டருக்கான வரியினை 12 ரூபா வரையில் குறைத்துள்ளனர். டீசலுக்காக வரியும் 04 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன்படி, எண்ணெய் கொள்கலனின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படுத்தியுள்ள விதத்தில் சந்தேகம் நிலவுகிறது..
என்றாலும், அது சரியோ பிழையோ பொதுமக்கள் எரிபொருள் விலை மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களது விலையினால் பெரிதும் அல்லல் படுகின்றனர். ஆதலால் அரசியல்வாதிகள் தங்களது அரசியலுக்கு முன்னர் தங்களை நியமித்த மக்கள் மீது கருணை காட்ட வேண்டும்.. ஆதலால், வரியினை குறைத்தாலும் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வருவார்கள் என நாம் நம்புகிறோம்..
நாட்டின் குறைந்த சம்பளத்திற்கு ஏற்றால் போல் குடும்பத்தினை நடத்துவற்கு பொருளாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்..”