• Sun. Oct 12th, 2025

மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை…

Byadmin

Oct 22, 2018

(மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை…)

மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் உரிமையை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் கருவிகளின் தரம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை, இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு வழங்கவுள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரின் பரிந்துரைக்கமைய, உரிய சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரத்தை வழங்கவுள்ளதாக சிசிர கோதாகொட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *