(வடக்கின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் இரத்து)
வடக்கின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஒன்று சேர்ந்து இம்முறை நவம்பர் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.