(இலங்கை பிரதமராக ராஜபக்ஷவை பாகிஸ்தான் அங்கீகரித்தது !!)
3–வது நாடாக, பாகிஸ்தானும் ராஜபக்சவை இலங்கை பிரதமராக அங்கீகரித்தது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் அகமத் ஹஷ்மத் நேற்று ராஜபக்வை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததன் மூலம் இந்த செய்தி உணர்த்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் நீடிக்க பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக ராஜபக்சேவிடம் பாகிஸ்தான் தூதர் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் சட்டப்படியும், இலங்கை மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் சுமுகமாக தீரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.