(07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் – சபாநாயகர்)
பாராளுமன்றத்தினை எதிர்வரும் 07ம் திகதிக்கு கூட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தற்போது இடபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதன்படி, அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(02) அல்லது நாளை(03) வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.