வெள்ளவத்தை சைவ மங்கயா் கல்லுாாி ஆரம்பிக்கப்பட்டு 85ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அக்கல்லுாாியின் கற்ற பழைய மாணவிகள், ஆசிரியா்கள், அதிபா்கள் தற்போது அங்கு கற்கும் மாணவிகள் இணைந்து 3500க்கும் மேற்பட்டோா் வெள்ளவத்தையில் இருந்து ஹெவலொக் டவுன் மைதானம் வரை நடை பவனை ஒன்றை ஏற்படுத்தினா் இதில் கல்லுாாியின் முகாமையாளா் யோதி சாந்தி துறைசாமி, மற்றும் கல்லுாாி அதிபா் திருமதி வேலுப்பிள்ளை, பழைய மாணவிகள் தலைவி திருமதி கனேந்திரன் ஆகியோா் தேசிய கொடி மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றி நடைபவணியை ஆரம்பதித்து வைத்தனா். இந் நிகழ்வில் அமைச்சா் மனோகனேசன், மாகாண சபை உறுப்பிணா் குருசாமியும் மாணவிகளுடன் இணைந்து நடைபவணியில் ஈடுபட்டனா்.
-அஷ்ரப் ஏ சமத் –