நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வந்ததுடன் , வழக்குகளுக்கு சமூகமளிக்காக நிலையில் பிடியாணை விதிக்கப்பட்டு இருந்த ஞானசார தேரர் இன்று காலை கோட்டை நீதிமன்றில் சரணடைந்தார்.
இந்நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையும் வாபஸ் பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் ஆகஸ்ட் எட்டாம் திகதி விசாரனைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை நீதிமன்றில் இருந்து வெளியேறிய ஞானசார தேரர் எந்த ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கவில்லை.