• Sat. Oct 11th, 2025

இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயம்..

Byadmin

Dec 28, 2018

(இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயம்..)

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான இப்போட்டியானது கடந்த 26 ஆம் திகதி கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இதில் முதலவதாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 178 ஓட்டங்களை பெற, பதிலுக்கு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து 74 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 04 விக்கெட்டுக்களை இழந்து 585 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பாக டோம் லெதம் 176 ஓட்டத்தையும், ஜீத் ரவோல் 74 ஓட்டத்தையும், வில்லியம்சன் 48 ஓட்டத்தையும், ரோஷ் டெய்லர் 40 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை ஹென்றி நிக்கோலஸ் 162 ஓட்டத்துடனும், கொலின் டி கிராண்ட்ஹாம் 71 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிறு குமார 2 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா மற்றும் சமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

659 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி சற்று முன் வரை 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து திணற ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *