• Sat. Oct 11th, 2025

A/L பெறுபேறு வந்துவிட்டது. அடுத்து என்ன? *What’s Next*?

Byadmin

Jan 1, 2019

(A/L பெறுபேறு வந்துவிட்டது. அடுத்து என்ன? *What’s Next*?)

The Young Friends அமைப்பு, கண்டி மாவட்டத்தில் சமூகப் பணியாற்றி வருகின்ற 50க்கும் மேற்பட்ட சமூகநல நிறுவனங்களுடன் இணைந்து கடந்த பல வருடங்களாக, கண்டி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதி பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான இலவச முழுநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை வெற்றிரமாக நடாத்தி வருகின்றது.
கண்டி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற துறைசார் நிபுணர்களை ஒன்றிணைந்து, இம்மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்படுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களின் ஒன்றாகும். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும், 50ற்கும் மேற்பட்ட முக்கிய வளவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில்…
*01. பல்கலைக்கழகத்திற்குவிண்ணப்பிப்பது எவ்வாறு? பல்கலைக்கழக காலப் பகுதியை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வது எவ்வாறு?*
*02. பல்கலைக்கழக நுழைவு கிடைக்காதவர்களுக்கு அரச, தனியார் துறைகளில் கல்வியைத் தொடர்வதற்கு எவ்வாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன?*
*03. உயர்தரம் எழுதியவர்களுக்கு எவ்வாறான தொழில் வாய்புக்கள் இருக்கின்றன?*
மற்றும்
*04. Motivational Programme and Career Test (ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொறுத்தமான துறையை இனங்காண்பதற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற பரீட்சை)*
போன்ற பல பகுதிகளில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமான மாணவர்களும், பெற்றோர்களும் மேலதிக விபரங்களுக்காக பின்வரும் link ஊடாக இந்நிகழ்ச்சிக்கான பிரத்தியேக WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
https://chat.whatsapp.com/KLvzpEtZPgZIfOHJwU5g5o
https://chat.whatsapp.com/IUWBVdkLfhr6jveqGlzHo5
https://chat.whatsapp.com/GKnIBM09DMqIPr1nDWq7DT
த யங் பிரண்ட்ஸ்
கண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *