(தேர்தலை விரைவாக நடாத்த நீதிமன்றின் ஆதரவினை நாடத் தீர்மானம்…)
மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற ஆதரவினை பெற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தயாராகி வருகிறது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கையில், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலினையும் நடாத்த நீதிமன்ற ஆதரவினை நாடுவதே இறுதியில் சரியாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, மாகாண சபைத் தேர்தலினை நீதிமன்ற ஆதரவுடன் நடாத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற பொறுப்புக் கூற வேண்டும் எனவும், தாமும் நீதிமன்றினை நாடவுள்ளதாக கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகமும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.