(நாம் பாராளுமன்றிற்கு புதியவர்களாக இருந்தபோதும் கட்சிக்கு புதியவர்கள் அல்ல ..)
நாம் பாராளுமன்றிற்கு புதியவர்களாக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் புதியவர்கள் அல்ல என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். பின்வரிசை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என கூறிய அவர் ஏன் என்றால் இந்த எஞ்சியுள்ள 10 மாதங்களில் விளையாட முடியாது என குறிப்பிட்டார்.
நீங்கள் பிரதி அமைச்சர் பதவி ஒன்றை எதிர்ப்பார்க்கின்றீர்களா ? என ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர், “நிச்சயாமாக ஆம் நானும் எதிர்ப்பார்க்கிறேன். மத்திய கொழும்பு தொகுதியானது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. அந்த தொகுதி மக்களுக்கும் சாதாரணம் நிலைநாட்டப்படவேண்டும் என குறிப்பிட்டார்.