(புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)
புதிய அமைச்சரவையின் விடயதானங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி, இன்று(07) வெளியிடப்படும் என அரசாங்க அச்சக கூட்டுத்தாபன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த 2ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, விடயதானங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே, விடயதானங்கள் அடங்கிய திருத்தப்பட்ட வர்த்தமானி, இன்று (07) வெளியிடப்படவுள்ளது.
குறித்த திருத்தத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருக்கும் அமைச்சுகளுக்குரிய விடயதானங்கள் பல, ஏனைய அமைச்சுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என அறியமுடிகின்றது.
இதேவேளை, அரச வங்கிகள் மற்றும் அரச பெருந்தோட்டங்கள், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு கீழிருக்கும் அரச தொழில்முயற்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.