(கடுகஸ்தோட்ட – என்ரதன்ன பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடை களஞ்சியசாலை தீக்கிரை)
இன்று அதிகாலை கடுகஸ்தோட்ட- வெறல்லகம – என்ரதன்ன பகுதியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை
ஒன்றின் களஞ்சியசாலை தீக்கிரையான சம்பவம் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் இன்று (8) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவம் இடம்பெற்று ஒருசில மணித்தியாலங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஊர் மக்களின் உதவியுடன் சில மூலப்பொருட்களில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட போதிலும். அதிகமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.
மிஹ்லார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் களஞ்சியப்படுத்தி வைக்கபட்டிருந்த சனீர் என்பவரால் நடாத்தப்படும் ஆடைத்தொழிற்சாலையின் பொருட்களே தீ விபத்தில் நாசமாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதேவேளை தொழிற்சாலையின் தீப்பற்றிய அறைகளில் மின்இணைப்பு இல்லை என தொழிற்சாலை உரிமையாளர்கள் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. கட்டுகஸ்தோட்டை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-பஸ்மீர் ஸறூக்-