(WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை)
WhatsApp சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைகளுக்கு மேல் அனுப்புவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வட்சப் சமூகவலைத்தளத்தில் ஒரே தகவலை 20 தடவைகளுக்கு மேல் அனுப்பக்கூடிய வகையில் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.