• Sun. Oct 12th, 2025

டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!

Byadmin

Feb 2, 2019

(டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!)

வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும் மைக் மூலம் குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இந்நிலையில், கூகுளின் ஜி-போர்டு ‘கீபோர்டு’ அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்அப்பில் அந்த வசதி அறிமுகம் செய்யப்படாவில்லை என்றாலும், ஜிபோர்டு வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலிலும் குறுந்தகவலை டைப் செய்யலாம்.

இதை செயல்படுத்த வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்புக்கு உங்களது செயலியினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.

பின் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்அப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு தோன்றும். அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். இந்த வகையில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது. இந்த வசதியை வாட்ஸ்அப் செயலியில் சேர்ப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

குறுந்தகவலை எழுத்துக்களாக டைப் செய்யும் பணியினை ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும், குறுந்தகவலை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *