(கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று(22) முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.