பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் யாசகம் கேட்வர்களினால் பொதுமக்களுக்கு இடையூரு அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு மாபியாவாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக கூறிய அவர் பொலிஸாருடம் சேர்ந்து யாசகம் கேட்பவர்களை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
யாசகர்களுக்கான காப்பகத்தில் உள்ள அடிப்படை தொடர்பில் தான் நேரடியாக சென்று ஆராய்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.