வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.
ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
கண்கள் துடிப்பது ஏன்?
உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.
குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.