• Sun. Oct 12th, 2025

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுகள்! இதை மட்டும் பண்ணுங்க போதும்..?

Byadmin

Aug 17, 2025

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமானது. மேலும், நார்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை கொடுக்கும். உடல் எடை குறைப்பிற்கு அதுவே பெரிதும் உதவும்.

உடல் எடை குறைக்க நார்ச்சத்து எப்படி உதவும் என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.ஷ

வாருங்கள் இப்போது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடிய சில நார்ச்சத்து நிறைந்த உணவுகளைப் பற்றி பார்ப்போம்…

கேரட்

எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் போது, நார்ச்சத்து நிறைந்த கேரட்டை சற்று அதிகம் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் இது மற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் தடுக்கும்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரியில் பேரளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஒரு கப் ராஸ்ப்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஓட்ஸ்

ஒரு பௌல் ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைய உதவியாக இருக்கும். எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் வளமான அளவில் நார்ச்சத்து உள்ளது. இதை பொடியாக நறுக்கி சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

சியா விதைகள்

சியா விதைகளில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தயிர் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருப்பதோடு, செரிமான மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.

ஆளி விதைகள்

2 ஸ்பூன் ஆளி விதையில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை சாலட் மேல் தூவி தினமும் சாப்பிட்டால், அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய உதவியாக இருக்கும்.

கைக்குத்தல் அரிசி

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் சராசரியாக 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர்கள், இந்த அரிசியை சமைத்து தினமும் சாப்பிட்டால் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

பருப்பு வகைகள்

ஒரு கப் பருப்புகளில் 15.6 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படத் தேவையான ஆற்றலையும் உடலுக்கு வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *