(மஹிந்தவுடன் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளோம்!)
20ம் திருத்தத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க மஹிந்த
ராஜபக்ஷவுடன் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடும் அக்கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஜனாதிபதி தேர்தல்களிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.ஆனால் அவை நிறைவேற்றப்பட்டவில்லை இந்த தருணத்தில் பாராளுமன்றம் ஜனாதிபதி முறையை நீக்க தீர்மானத்தை நிறைவேற்றினால் மக்கள் மன்றில் போய் அவர்கள் விருப்பத்தை கோரலாம் என குறிப்பிட்டார்.