(பேஸ்புக் பதிவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ; முஜிபுர் ரஹ்மான் சபாநாயகருக்கு கடிதம்..)
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு உயிர் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தள்ளார்.
பாதாள உலகத்தலைவர் மாகந்துரை மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்திருப்பதாக குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்று வெளியாகியிருந்தது. இந்தப் பதிவின் காரணமாகவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.