வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம் சுவசிரிபாயவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த உறுதியினை அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கியுள்ளார்.
இதேவேளை, புத்தளம், சம்மாந்துறை, குருணாகல், மன்னார், சிலாவத்துறை, கிண்ணியா தோப்பூர் ஆகிய வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்தார்.
இதில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லா மஹ்றூப், முன்னாள் உபவேந்தரும் லக்சல நிறுவனத்தின் தலைவருமான இஸ்மாயில் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.