(இஸ்ரேலிய மருத்துத் தயாரிப்புகள் பலஸ்தீன் கைதிகளில் சோதனை செய்யப்படுகின்றன)
இஸ்ரேலில் இயங்கும் மிகப் பெரும் மருந்தகங்களுக்கு அவற்றின் தயாரிப்புகளை பலஸ்தீன் மற்றும்அறபுக் கைதிகளில் பரிசோதிப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் என்று இஸ்ரேலிய பேராசிரியை நதீரா ஷல் ஹூம் தெரிவித்துள்ளார். palestine.ps எனும் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
ஹிப்ரு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியை நதிரா, இஸ்ரேலிய இராணுவக் கம் பனிகள் தமது ஆயுதங்களை பலஸ்தீனக் குழந் தைகள் மீதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் வாழ்கின்ற அறபு மக்கள் மீதும் பரீட்சித்துப் பார்ப்பது போல, இஸ்ரேலின் புதிய மருந்துக் கண்டுபிடிப்புக்களின் பக்கவிளைவுகள் பலஸ் தீனக் கைதிகளில் பரீட்சித்துப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பான ஓர் ஆராய்ச்சியை தான் மேற் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பலஸ்தீன நிலங்கள் இஸ்ரேலின் பரிசோதனைக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அரச அனுசர ணையுடன் கூடிய பாதுகாப்புத் துறை ஊரடங்குச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் மூலம் பலஸ்தீன மக்களை ஒடுக்கி வருவதாகவும் பேராசியை நாதிரா அங்கு குறிப்பிட்டார்.
பலஸ்தீன ஜெரூசலத்தில் வன்முறைக்குத் துணைபோகும் தொழில்நுட்பம் எனும் தலைப் பிலேயே அவர் உரையாற்றினார். 1997 ஜூலை யில் வெளிவந்த இஸ்ரேலின் செய்திப் பத்தி ரிகையான எடியோத் அகரநோத், அப்போதைய பாராளுமன்ற குழுக்களின் தலைவர் டாலியா இத்சிக்கின் கருத்துக்களைத் தாங்கி வந்தது.
இஸ்ரேலின் சுகாதார அமைச்சு அந்நாட்டின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்துகளில் பக்க விளைவை பலஸ்தீன் அகதிகளில் பரீட்சிப் பதற்கான அனுமதியை வழங்கியது என டாலியா தெரிவித்த கருத்தை அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது. ஏற்கனவே இத் தகைய 5000 சோதனைகளை இஸ்ரேலிய மருத்து தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டிருந்தன.
2018 ஓகஸ்ட் மாதத்தில் பெல்ஜியத்தின் தொழிற்சங்க செயலாளர் காஸாவில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களது உறுப்புக்கள் திருடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். ஐ.நா.வுக்கான பலஸ்தீனின் முன்னாள் தூதுவர் ரியாத் மன்சூர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படும் பலஸ்தீனர்களின் உடலிலிருந்து முக்கிய உறுப்புக்கள் அகற் றப்பட்ட நிலையிலேயே ஜனாஸாக்கள் ஒப்படைக்கப்படுவதாக ஐ.நா.வில் முறையீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.