பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 200 கோடியை கடந்துள்ளது.
ஏப்ரல் மாத ஆரம்பம் வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சர்வதேச அளவில் தற்போது மாதந்தோரும் 200 கோடி பேர் இந்த பேஸ்புக் சேவையை பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் தனது பயனர்களின் எண்ணிக்கை தற்போது 200 கோடியை கடந்துள்ளபோதும் அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பேஸ்புக் தீர்மானித்துள்ளது. அதனால் வளர்ந்துவரும் நாடுகளில் பேஸ்புக் சேவை குறைவாக உள்ள எண்ணிக்கையை அதிகரிக்க பேஸ்புக் தற்போது முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை இன்று காலை வரை 200 கோடி பேர் இணைந்துள்ளனர்என்பது குறித்து , உலகை இணைப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், தொடர்ந்து உலகை இணைப்போம். இந்த பயணத்தில் உங்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது” என மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் பதிவில்குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் நேரலை வீடியோ வசதி, கேமரா அம்சங்களில் புதிய வசதிகளை இணைத்துள்ள பேஸ்புக் சற்று முன்னேற்றமாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சார்ந்த வசதிகளை வழங்கும் பணிகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது.
ட்விட்டர் சேவையை சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்துவதோடு ஸ்நாப்சாட் சேவையை இதுவரையில் 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், பேஸ்புக் வளர்ச்சி மற்ற சமூக வலைத்தளங்களை விட பன்மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.