(போக்குவரத்து விதிகளை மீறிய 4 பேரிடம் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.)
போக்குவரத்து குற்றங்களுக்கு அறவிடப்படும் அதிகூடிய தண்டப்பணமான 25000 ரூபாவை செலுத்துமாறு கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய மூவருக்கும், சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஒட்டிய ஒருவருக்கும் என மொத்தம் நால்வருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய குற்றத்தில், சம்பத் விக்ரமரத்ன, சுசந்த அத்தநாயக்க, புத்திக ராஜபக்ச ஆகியோர்க்கும்,சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஒட்டிய மலின் சில்வா ஆகியோருக்குமே இவ்வாறு தண்டப்பண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.