(வெகு விரைவில் தாய் நாட்டுக்கு திரும்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ளேன்)
வெகு விரைவில் தாய் நாட்டுக்கு திரும்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணத்துக்காகவும் பின்நிற்க தயாராகவில்லை என்றும், மக்களுக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க இன்று சிங்கப்பூரில் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.