(“ஹக்கீமின் ஒருங்கிணைப்பாளர்கள் 85 பேருக்கு 16 கோடி கொடுப்பனவு” – லங்கா தீப)
ஹக்கீமின் ஒருங்கிணைப்பாளர்கள் 85 பேருக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையினால் 16 கோடி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை கோப் குழு விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக லங்கா தீப தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் அமைச்சர் ஹக்கீம் அமைச்சு செயலாளர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் அன்ஸார் உள்ளிட்ட அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இந்தவிடயம் தெரிய வந்துள்ளது.
2015 ம் வருடம் முதல் அமைச்சரின் 85 ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இது 16 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சருக்கு 35 ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பதாகவும் கோப் குழு விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.