• Wed. Oct 15th, 2025

வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்

Byadmin

Oct 11, 2019

(வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்)

Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில் 

வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்குஅமைவாக இந்த பட்டியலில் உலகில் வறிய நாடுகளின் மத்தியில் முதலாவது இடத்தில் கொங்கோ குடியரசுஇடம்பெற்றுள்ளது.

உலகில் வறிய நாடுகள் மத்தியில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களின் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டாநாடுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை இந்த வறிய நாடுகளின் மத்தியில் 36 ஆவது இடத்தில்இடம்பெற்றுள்ளது. பொருளாதார ஆய்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் வறிய நாடுகளின்பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த பட்டியலில் 19 ஆம் மற்றும் 12 ஆம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா இந்த பட்டியலில் 121 ஆவது இடத்திலும், ரஷ்யா 71 ஆவது இடத்திலும், சீனா 69 ஆவதுஇடத்திலும் இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *