• Sat. Oct 11th, 2025

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி

Byadmin

Jul 3, 2017
அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.
டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் குறுகிய காலத்திற்குள் காலநிலை எதிர்வுகூறலை மேம்படுத்துவது இந்த நிதியின் மூலம் இடம்பெறும் முக்கிய பணியாகும். இதற்கான திட்டத்திற்காக 3.4 பில்லியன் ரூபா செலவிடப்படும்.
இதன் கீழ் கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களிலும் புத்தளம், பொத்துவில் ஆகிய இடங்களிலும் ரேடார் கண்காணிப்பு மத்திய நிலையங்களும் உள்நாட்டு காலநிலை மத்திய நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும். இந்த மத்திய நிலையங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
அரச துறையின் நிறைவேற்று அதிகாரிகளுக்க ஜப்பான் பல்கலைக்கழகங்கள் ஊடாக பயிற்சியை வழங்கி அவர்களின் ஆற்றலை விருத்தி செய்வதற்காக 634 மில்லியன் ரூபா செலவிடப்படும். ஜப்பான் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பையும் அரச அதிகாரிகள் பெற்றுக் கொள்ளனர்.new.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *